பல்கலைக்கழகங்களுக்கு தகுதிபெற்ற மாணவர்களுக்கான பதிவு தொடர்பில் முக்கிய அறிவிப்பு!
Friday, November 19th, 2021
பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கையானது எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக் கழகங்களுக்கான வெட்டுப்புள்ளிகளை வெளியிடும் நடவடிக்கைகள் நிறைவுடைந்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய ஒவ்வொரு மாணவரும் தான் தெரிவாகியுள்ள பல்கலைக்கழகம் மற்றும் பாடநெறிகள் தொடர்பில் அறிந்துள்ளதாக தெரிவித்தார்.
இதனையடுத்து, அவர்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யும் நடவடிக்கையே முன்னெடுக்க வேண்டியுள்ளதாக பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார்.
இம்முறை பல்கலைக்கழகத்திற்கு 41 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0000
Related posts:
மெல்போர்னில் தரையிறங்கிய ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ்!
வடக்கில் மேலும் 55 பேருக்குக் கொரோனா தொற்று - முல்லைத்தீவு ஆடைத் தொழிற்சாலையில் 20 பேர் பாதிப்பு!
இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு சீனா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் - பிரதமரிடம் இலங்கைக்கான...
|
|
|


