கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!
Friday, November 19th, 2021
அரசாங்கம் என்ற வகையில் கொரோனா தொற்றுக்கான அனைத்து விடயங்களையும் செய்துள்ளோம் என்றும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதுவரை நூற்றுக்கு 75 சதவீதற்கும் மேற்பட்டோருக்கு இரண்டு கொரோனா தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தற்போது பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் எஞ்சிய பகுதி பொதுமக்களின் கைகளில் தான் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஏற்கனவே எடுத்துள்ளதாகவும் மக்கள் தமது பொறுப்புகளை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் என்றும் கண்டியில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மனித உரிமைகள் தொடர்பிலான விவாதங்கங்கள் அரசியல் காரணங்களுக்கானதாக அமைந்துவிடக் கூடாது - ஐ.நாவிடம் சீ...
உள்ளூராட்சி தேர்தல் - தபால் மூல வாக்கெடுப்பு இம்மாதம் இடம்பெறாது - தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமா...
இலங்கையில் சுமார் 2,087 பதின்ம வயது தாய்மார்கள் பதிவாகியுள்ளனர் - இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க...
|
|
|


