அத்தியாவசியப்பொருட்களின் விலைகளை சந்தை நிலைமைகளே தீர்மானிக்கின்றன – ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் விலைகளை அதிகரிக்கவும் எந்தவொரு வர்த்தகருக்கும் அனுமதியில்லை என நிதி அமைச்சு அறிவிப்பு!
Saturday, November 6th, 2021
இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தற்போது உள்ளூர் சந்தைகளில் விநியோகம் மற்றும் தேவையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க எந்தவொரு வர்த்தகருக்கும் அனுமதியில்லை எனவும் நிதி செயலாளரான எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.
இதேநேரம் உள்ளூர் சந்தைகளில் விலைகளை தொடர்ந்து இலங்கை நுகர்வோர் அதிகாரசபை கண்காணித்து வருவதாகவும், அதேவேளை உள்ளூர் சந்தையில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாட்டின் பல பாகங்களில் மழை பெய்யும் சாத்தியம் - காலநிலை அவதான நிலையம்!
எதிர்வரும் வெள்ளிவரை வட மாகாணம், கொழும்பு உட்பட எட்டு மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் நீடிப்பு!
நாடு மீண்டும் முடங்கும் அபாயம் - கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் எச்சரிக்கை!
|
|
|


