எச்சரிக்கை! நாட்டில் பலமான காற்று வீசும்! – வளிமண்டலவியல் திணைக்களம்!
Wednesday, August 17th, 2016
நாட்டைச் சுற்றியுள்ள கடற் பிரதேசங்களில் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இக்காலப் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலைமை காரணமாக மீனவர்கள் மற்றும் கடற்படையினர் கடும் அவதானத்துடன் இருக்குமாறு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தரைப்பிரதேசத்தில் திடீரென கடும் காற்று வீசக்கூடும் என்றும் இன்று வெளியிடப்பட்டுள்ள குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் சில பிரதேசங்களில் மழை பொழியும் சாத்தியம் உள்ளதாகவும் இந்த நிலை நாளை வரை நீடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
Related posts:
மஹிந்த பின்னால் சென்றது நான் இல்லை சாணக்கியனே - நாடாளுமன்றில் சுட்டிக்காட்டிய முன்னாள் பிரதமர் ரணில...
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை விசேட கலந்துரையாடல்!
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் எதிர்வரும் சில தினங்களில் வர்த்தமானியில் வெளியாகும் - வெளிவிவகார ...
|
|
|


