மரக்கறிகளின் விலை அதிகரிப்பு – நுகர்வோர் கவலை!
Friday, November 5th, 2021
நாடு முழுவதும் உள்ள வர்த்தக நிலையங்களில், மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சில சிறப்பு அங்காடிகளில், போஞ்சி, கரட், லீக்ஸ் உள்ளிட்ட மரக்கறிகள் ஒரு கிலோவின் விலை 200 முதல் 300 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், விசேட பொருளாதார மையங்களிலும் கொழும்பு மரக்கறி சந்தையிலும் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் மரக்கறிகளின் சில்லறை விலைகளும் அதிகரித்துள்ளதாக, நாடு முழுவதும் சில்லறை மரக்கறி வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் யாழ் மாவட்டத்திலும் உள்ள பிரதான சந்தைகளில் மரக்கறி வகைகளின் விலைகளில் அண்மைய வாரங்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் நுகர்வோர் தாம் பலஅசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துவருவதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
Related posts:
அனைத்து ஆயுதங்களும் அழிந்துள்ளதாக இராணுவம் அறிவிப்பு!
தென்னை பயிர்ச்செய்கையை ஊக்குவிக்க தொழில்நுட்பப் பயிற்சி!
சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையிலேயே நாடு முழுமையாக திறக்கப்பட்டது - அமைச்சர் நாமல் தெரிவ...
|
|
|


