தடையின்றி லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறும் – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!
Wednesday, November 3rd, 2021
லிட்ரோ நிறுவனத்துக்கு சொந்தமான 4, ஆயிரம் மெட்ரிக் டன் பெற்றோலிய திரவ எரிவாயு அடங்கிய கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இதனால் நாட்டில் தடையின்றி எரிவாயுவை விநியோகிக்க முடியும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
நாட்டில் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு நிலவுவதாக பல இடங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், தற்காலிகமாக ஏற்பட்டிருந்த இந்தத் தட்டுப்பாடு, தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கொரோனா அச்சம் - மூடப்பட்டது அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கையின் துணைத்தூரகம்!
ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் - பாடசாலைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது நாளையுடன் நிறைவு!
தேர்தல்கள் ஆணைக்குழுவில் முக்கிய கலந்துரையாடல் - அனைத்து அமைசுக்களின் செயலாளர்களுக்கும் அழைப்பு!
|
|
|


