தெற்காசியாவின் பலம்மிக்க பொருளாதார நாடாக இலங்கை உருவாகும் – பிரதமர்!
Wednesday, August 17th, 2016
வருங்காலத்தில் இலங்கை தெற்காசியாவில் அபிவிருத்தி அடைந்த பலம் மிக்க பொருளாதார வர்த்தக சந்தைக்கு உரிமை கோரும் நாடாக மாறும். எனவே அதனை இலக்குவைத்து கைத்தொழில் மற்றும் உற்பத்தி சேவை வழங்குவதற்கு ஆசியாவின் பொருளாதார வல்லரசுகள் தற்போதே திட்டமிடவேண்டுமென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவில் தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திரத்தை சுற்றி உருவாகிவரும் புதிய சந்தையை கைப்பற்றிக்கொள்வதற்காக நீண்டகால திட்டங்களை உருவாக்குவதில் இலங்கையின் பூகோள அமைவிடமானது பொருளாதார அபிலாஷைகள் விடயத்தில் மிகவும் முக்கியமானதாகும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
சீனாவிற்கு விஜயமேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செஞ்சன் நகரில் நேற்று நடைபெற்ற வர்த்தக முயற்சியாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Related posts:
மாகாணசபைத் தேர்தல் டிசெம்பரில் - பிரதமர்
அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் மாகாணங்களுக்கு இடையில் பேருந்து சேவை - இலங்கை போக்குவரத்து சபையின...
அஸ்வெசும திட்டத்த்திலுள்ள பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காண்பதற்காக பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமைய...
|
|
|


