கொரோனா வைரஸின் புதிய வகை பிறழ்வு இலங்கைக்குள் நுழையும் அபாயம் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!
Monday, November 1st, 2021
கொரோனா வைரஸின் A.30 என்ற புதிய வகை பிறழ்வு இலங்கைக்குள் நுழையும் அபாயம் இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ள அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண, ஏனைய நாடுகளில் முன்னர் கண்டறியப்பட்ட அனைத்து கொரோனா வைரஸின் பிறழ்வுகளும் குறுகிய காலத்திற்குள் இலங்கையில் கண்டறியப்பட்டதாக தெரிவித்தார்.
அதேபோல, இந்த புதிய மாறுபாடும் நாட்டில் எந்த நேரத்திலும் அடையாளம் காணப்படலாமென அவர் தெரிவித்தார்.
இந்த புதிய மாறுபாடு நாட்டிற்குள் நுழைந்து பரவத் தொடங்கினால், நிச்சயமாக ஒரு பேரழிவு சூழ்நிலை ஏற்படும் என்று அவர் எச்சரித்தார்.
எனவே, சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்குமாறு பொதுமக்களை அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சீரற்ற வானிலை - 14,164 பேர் பாதிப்பு - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்!
பொது போக்குவரத்து சேவையை வலுப்படுத்த 8 மாற்றங்கள் – துறைசார் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!
அணு ஆயுத தவிர்ப்பு மற்றும் அணு ஆயுத மட்டுப்படுத்தலுக்காக இலங்கை அர்ப்பணிக்கும் - வெளிநாட்டு அலுவல்கள...
|
|
|
சுற்றறிக்கை வெளியிடப்பட்டால் சேவையில் ஈடுபடத் தயார் -பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்தகூட்டணி...
மக்களுக்கு கடமையாற்றும்போது மொழி ஒரு பிரச்சினையான விடயமல்ல - வடக்கின் பிரதம செயலாளர் தெரிவிப்பு!
அனைவரினதும் கருத்துகளின் பிரகாரமே குரங்குகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் - விவசாய அமைச்சு அற...


