பாடசாலை மூலம் தடுப்பூசியைப் பெற முடியாத மாணவர்கள் வைத்தியசாலைகளில் பெற்றுக்கொள்ள முடியும் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!
Sunday, October 24th, 2021
பாடசாலை மூலம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியாத மாணவர்களுக்கு வைத்தியசாலைகளின் ஊடாக தடுப்பூசியை வழங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
தடுப்பூசித் திட்டத்துக்கு அமைய 16 முதல் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு பாடசாலைகளின் ஊடாக தடுப்பூசி வழங்கப்படுகிறது.
இந்நிலையில் பாடசாலைகளில் தடுப்பூசியைப் பெற முடியாத மாணவர்கள், வார இறுதி நாட்களில் வைத்தியசாலைகளுக்குச் சென்று தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகமான விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாதுகாப்பான முறையில் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது முக்கியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அனைத்து செயற்பாடுகளும் மறுஅறிவித்தல் வரும் வரை முடக்கம் - யாழ் பல்கலை ஊழியர் சங்கம்!
அடுத்த 20-30 வருடங்களைப் பற்றி சிந்தித்து இப்போதே செயற்பட வேண்டும் - நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்...
ரணில் - சஜித் மிக விரைவில் ஓரணியில் சங்கமம் - இரு தரப்பு பேச்சுக்கள் அடுத்த வாரம் ஆரம்பம்!
|
|
|


