கல்வித்துறையில் பாரிய மறுசீரமைப்பினை ஏற்படுத்துவது அவசியம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டு!
Thursday, October 14th, 2021
கல்வித்துறையில் பாரிய மறுசீரமைப்பினை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்தியக் குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினரான வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார்.
பட்டப்படிப்பினை நிறைவு செய்யும் வயதெல்லை அதிகரிக்கப்பட்டுள்ளதால் மருத்துவத்துறை மாணவர்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும இது தொடர்பான பரிந்துரைகள் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் இணையத்தளத்தில் பொதுமக்கள் கருத்துகளுக்காகப் பதிவேற்றப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் புகையிலை வரி நிச்சயம் அமுலாகும்!- அமைச்சர் ராஜித்த சேனாரத்ன
யாழ் போதனா வைத்தியசாலையில் 2ஆம் கட்ட நிர்மாணப்பணிகள்!
கட்சி பாகுபாடுகள் இன்றி அனைவருக்கும் சேவை செய்வதே நமது இலக்கு – கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழ...
|
|
|


