பெரும்போகத்திற்கான சேதன உர விநியோகம் இன்றுமுதல் ஆரம்பம் – விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அறிவிப்பு!
Wednesday, October 13th, 2021
நெற்பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்குப் பெரும்போகத்திற்கான சேதன உர விநியோகம் இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விவசாயத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, அம்பாறை, அனுராதபுரம், பொலன்னறுவை, மொனராகலை, திருகோணமலை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை, குருநாகல் மற்றும் புத்தளம் முதலான மாவட்டங்களுக்கு, சேதன உர விநியோகத்தில் முன்னுரிமை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் உள்ளூராட்சி தேர்தல்!
அனர்த்த நிவாரணங்களுக்கு பிரதமர் நிதியுதவி!
இரண்டாம் கட்ட அஸ்வசும கொடுப்பனவை வடக்கில் ஆரம்பிக்க நிதியமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்!
|
|
|


