மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை 21 ஆம் திகதிவரை இடம்பெறாது – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்!
Saturday, October 9th, 2021
மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை எதிர்வரும் 21ஆம் திகதி வரை ஆரம்பிக்கப்படாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமையவே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் மாதம் முதலாம் திகதிமுதல் மாகாணங்களுக்குள் முன்னெடுக்கப்பட்டுவரும் பேருந்து போக்குவரத்து, அவ்வாறே முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் 15ஆம் திகதிமுதல் அனைத்து ரயில் சேவைகளையும் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எத்தகைய தேர்தல்களுக்கும் தயார் - தேர்தல்கள் ஆணைக்குழு!
பலவீனங்களைக் களைந்து இந்த ஆண்டில் இலாபகரமான நிறுவனமாக மாற வேண்டும் -இலங்கைப் போக்குவரத்துச் சபையிடம்...
இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு பாரதப் பிரதமர் மோடி வாழ்த்து
|
|
|


