19 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை : வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்!
Friday, October 1st, 2021
நாட்டின் 19 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான சாத்தியமிருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதன் தாக்கம் நாளை மதியம் 12.00 மணி வரை இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் அனர்த்த பேரிடர் முன்கூட்டிய எச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது.
இதேநேரம் வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில் 150 மி.மீற்றருக்கு மேல் கன மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது
000
Related posts:
பேஸ்புக் செயலி செயலிழப்பு - கவலை வெளியிட்டுள்ள பேஸ்புக் நிறுவனம்!
கொரோனா: அமெரிக்காவில் 93,000 பேர் உயிரிழக்கலாம் – எச்சரிக்கும் நியூயார்க் ஆளுநர்!
கடும் சுகாதார நடைமுறைகளுக்கு மத்தியில் சிறப்புற நடைபெற்ற நல்லூர் கந்தனின் கொடியேற்ற உற்சவம்!
|
|
|
ஜனாதிபதியின் பிறந்த தினத்தினை முன்னிட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் 63 நோயாளர்களுக்குக் கண் சத்திர...
பிரதமர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடைய...
இலங்கை இன்று மறுமலர்ச்சி பாதைக்கு பிரவேசித்துள்ளது - அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை முன்னேற்ற ஜனாதிபதி ...


