ஏவுகணை எதிர்ப்பு அமைப்பிற்கு எதிராக தென் கொரியர்கள் போராட்டம்!
Tuesday, August 16th, 2016
தென் கொரியாவில் உள்ள சியோங்ஜு பகுதியில் உத்தேசிக்கப்பட்ட அமெரிக்க ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு நிலைநிறுத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் ஆயிரம் தென் கொரியர்கள் தங்கள் முடியை மழித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என தெரியவருகின்றது.
1945 ஆம் ஆண்டு ஜப்பானின் காலனித்துவ ஆட்சியிலிருந்து கொரியா தீபகற்பம் விடுதலை பெற்ற தினத்தின் ஆண்டு நிறைவுடன் இந்தப் போராட்டமும் நடைபெற்றது. வட கொரியாவிடமிருந்து அச்சுறுத்தல்கள் தீவிரமடைந்துவரும் நிலையில், கடந்த மாதம் அமெரிக்காவும், தென் கொரியாவும் சர்ச்சைக்குரிய ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு முறையை நிலைநிறுத்த ஒப்புக் கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related posts:
முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத்தண்டனை!
தொடரும் கலவரம்: சிலியில் 23 பேர் உயிரிழப்பு!
காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைச் சமாளிக்க இலங்கைக்கு பிரித்தானியா ஆதரவு!
|
|
|


