கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
Friday, September 17th, 2021
கொரோனா தொற்றிலிருந்து மேலும் ஆயிரத்து 336 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 28 ஆயிரத்து 590 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 96 ஆயிரத்து 423 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 699 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
பெரியளவில் குற்றச் செயல்கள் இல்லை - பொலிஸ் மா அதிபர்!
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நகர்வதற்கான சாத்தியம் அதிகரிப்பு - சில பகுதிகளில் மழை பெய்யும் என வளி...
நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்ற செய்தியை சர்வதேச நாணய நிதியம் உலகுக்கு அனுப்பியுள்ளது - அமைச்ச...
|
|
|


