சர்வதேச ரீதியிலான அவசர நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்கும் நடவடிக்கையே, அவசரமற்ற பொருட்களுக்கான இறக்குமதி விதி – வர்த்தக அமைச்சர் தெரிவிப்பு!

Saturday, September 11th, 2021

சர்வதேச ரீதியிலான அவசர நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்கும் நடவடிக்கையாகவே, அவசரமற்ற பொருட்களுக்கான இறக்குமதி விதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதனூடாக பொருட்களுக்கான  தட்டுப்பாடு  ஏற்படாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

வெளிநாட்டு நாணய கட்டுப்பாட்டு முறைமைக்கு மாத்திரமே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்தியாவசியமற்ற அல்லது அவசரமற்ற 623 பொருட்களின் இறக்குமதி உரிமம் பெற்ற வணிக வங்ககிகள், தேசிய சேமிப்பு வங்கிகளுடனான நாணயக் கடிதங்களினதும், அத்துடன் ஏற்றுக்கொள்ளும் நியதிகளுக்கு எதிரான ஆவணங்களின் கீழ் நூறு சதவீத காசு எல்லை வைப்புத் தேவைப்பாட்டினை விதிப்பதற்குத் இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

குறிப்பாக, ஊக வியாபாரத் தன்மையிலான மிதமிஞ்சிய இறக்குமதிகளை ஊக்கமிழக்கச் செய்வதன் வாயிலாக அந்திய செலாவணி வீத உறுதிப்பாட்டினையும் வெளிநாட்டு நாணயச் சந்தை திரவத் தன்மையினையும் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு இதுதுணை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி அறிவித்திருந்தது.

இதற்கமைய, கையடக்க தொலைபேசிகள், நிலையான தொலைபேசி உள்ளிட்ட தொலைத் தொடர்பு சாதனங்கள், மின் விசிறிகள், தொலைகாட்சி, குளிர்சாதன பெட்டி, சலவை இயந்திரம், டிஜிட்டல் புகைப்பட கருவிகள் உள்ளிட்ட வீட்டு சாதனங்கள் போன்ற இறக்குமதிகளுக்கு எதிராக 100 சதவீத காசு எல்லை வைப்பு தேவைப்பாட்டினை விதிப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106