யாழிலுள்ள வீடொன்றில் தீ விபத்து- பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்!
Friday, September 3rd, 2021
யாழ்ப்பாணம்- பருத்தித்துறை வீதியில் ஆரியம்குளம் சந்திக்கு அருகிலுள்ள மேல்மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வீட்டிலுள்ள சுவாமி அறையில் விளக்கேற்றிவிட்டு அங்கு வசிக்கும் பெண் ஆலயம் சென்று திரும்பிய நிலையில் வீட்டிக்குள் தீ விபத்து இடம்பெற்றதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு வருகை தந்த யாழ்ப்பாணம் மாநகர தீயணைப்புப் படை, தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க தீர்மானம்!
இன்றும் ஏழரை மணித்தியால மின்வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டது - பொது பயன்பாடுகள் ஆணைக்குழு!
ரஷ்யா - உக்ரைன் போர் - பாதுகாப்பு காரணமாக விமானந்தாங்கி போர்க்கப்பலை சமர்க்களத்துக்குச் சமீபமாக நகர...
|
|
|


