சமூகத்தில் சுமார் 50 ஆயிரம் கொவிட் தொற்றாளர்கள் இருக்கக்கூடும் – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவிப்பு!

Wednesday, September 1st, 2021

நாட்டில் நாளாந்தம் 5 ஆயிரத்திற்கும் அண்மித்த எண்ணிக்கையில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்ற நிலையில் சமூகத்தில் சுமார் 50 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் வரை இருக்கக்கூடும் என இராஜாங்க அமைச்சரும் விசேட வைத்தியருமான சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாட்டில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட வேண்டும் எனவும் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்ளே தெரிவித்துள்ளார்..

அத்துடன் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நிலமை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட வேண்டும் என்பது தனது தனிப்பட்ட கருத்து என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106