சாதாரணதர மற்றும் உயர்தர மாணவர்களுக்கு முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை – கல்வி அமைச்சு தெரிவிப்பு!
Tuesday, August 31st, 2021
கொரோனா தடுப்பூசியை முதற்கட்டமாக, கல்வி பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர் தர மாணவர்களுக்கு செலுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து, சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமைய, பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளோம்.
எனினும், தடுப்பூசி வழங்கும் சரியான திகதி இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை, எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு - பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகம் அறிவிப்பு!
இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பில் கைத்தொழில் அமைச்சர் - மத்திய வங்கி ஆளுநருடன் கலந்துரையாடல்!
அரசியலமைப்புச் சபையால் ஏற்படும் தாமதங்கள் குறித்து ஆராய்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு - ஜனாதிபதி ...
|
|
|


