தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 61 ஆயிரத்து 587 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிப்பு!
Monday, August 30th, 2021
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 581 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதனடிப்படையில் கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 61 ஆயிரத்து 587 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள நிலையில், மேல் மாகாணத்திற்கு நுழையும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் 13 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் மற்றும் மேல் மாகாணத்திற்குள் நுழையும் பகுதிகளில், 805 வாகனங்களில் பயணித்த ஆயிரத்து 792 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
எம்.ஆர். லதீப்பிற்கு நியமனம் வழங்காமை குறித்து பொலிஸ் மா அதிபர் - பொலிஸ் ஆணைக்குழு இடையில் முரண்பா...
தொடர் மழை: கிளிநொச்சியில் 22,262 பேர் வெள்ளத்தால் பாதிப்பு - மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம்!
துல்லியமான தரவின்றி கொரோனாவை எதிர்த்துப் போராடுவது கடினம் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிப்ப...
|
|
|


