தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 718 பேர் கைது – 13 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிசார் அறிவிப்பு!

Sunday, August 29th, 2021

தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 718 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 13 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் கடந்த ஒக்டோபர் முதல் இதுவரை 61 ஆயிரத்து 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றுமு; பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை மேல் மாகாணத்தின் எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள 13 வீதிச் சோதனை சாவடிகளில் மேல் மாகாணத்துக்குள் பிரவேசித்த 2 ஆயிழரத்து 82 வாகனங்கள் சோதனையிடப்பட்டுள்ளன.

அத்துடன், மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறிய ஆயிரத்து 258 வாகனங்கள் சோதனையிடப்பட்டதாகவும் பொலிஸ்  ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


இடமாற்றம் வழங்கப்பட்டு பணிக்கு திரும்பாத 44 ஆசிரியர்களை பணி இடைநீக்கம் செய்யுமாறு ஆளுநர் சாள்ஸ் பணிப...
காரைநகர் கடற்பரப்பில் கடந்த 18 ஆம் திகதி உயிரிழந்த இந்திய மீனவரின் உடலம் உறவினரிடம் ஒப்படைப்பு!
55 கருத்திட்ட அலகுகளை முடிவுறுத்த அரசாங்கம் தீர்மானம் - ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமை...