மங்களவின் இழப்பு வேதனையளிக்கிறது – இரங்கல் செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, August 24th, 2021

கொவிட் பேரவலத்தினால் நாட்டில் நாள்தோறும் ஏற்படுகின்ற நூற்றுக்கணக்கான உயிரிழப்புக்களை கட்டுப்படுத்துவதற்கு  அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இவ்வாறான சூழ்நிலையில், முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவும் உயிரிழந்துள்ளார் என்ற செய்தி அறியக் கிடைத்துளளது.

அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பால் நற்பண்புகளை கொண்ட ஒருவரான மங்கள சமரவீரவின் இழப்பு எமக்கு வேதனையை ஏற்படுத்தியிருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அன்னார்ன் இழப்பு குறித்து விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

சக நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சரவையில் இணைந்து செயற்பட்ட காலத்திலும் அமரர் மங்கள சமரவீர இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை வலுப்படுத்தப்பட வேண்டும் என்ற யதார்த்தத்தினை உணர்ந்து செயற்பட்டிருந்தார்.

அன்னாரின் இழப்பினால் துயருற்று இருக்கின்ற அவரின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அத்துடன், காலம் தாமதிக்காமல் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதன்  மூலமும், அரசாங்கத்தினால் அறிவுறுத்தப்படுகின்ற சமூக பாதுகாப்பு ஒழுங்குகளை இறுக்கமாக பின்பற்றவதன் மூலம் எதிர்கொண்டுள்ள பேரவலத்தில் இருந்து நாட்டை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் இச்சந்தர்ப்பத்தில் வலியுறுத்த விரும்புகின்றேன் என்றும் தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது

Related posts:

திருகோணமலை மக்களது காணி உரிமங்கள் தொடர்பான பிரச்சினைத் தீர்க்கப்பட வேண்டும் - சபையில் டக்ளஸ் தேவானந்...
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு இவ்வருடத்திற்குள் முற்றுப்புள்ளி - கடற்றொழில் அமைச்சர் டக்...
மக்கள் தமது வாக்குகளை வீணை சின்னத்துக்கு வழங்கி ஈ.பி.டி.பியை அரசியல் பலம் மிக்கவர்களாக்க அணிதிரள வேண...

இரணைதீவில் கடற்தொழில் மேற்கொள்வதிலுள்ள பிரச்சினைகள் தொடர்பில் துறைசார் தரப்பினருடன் அமைச்சர் ஆராய்வு...
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களுக்கான பிரதமரின் பிரதிநிதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஆல...
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் ஒத்துழைப்பை முழுமையான விடியலாக கருதி விடக்கூடாது - அமைச்சர் டக்ளஸ் வலி...