இலங்கையில் 7 ஆயிரத்தை கடந்த கொரோனா மரணங்கள்!
Sunday, August 22nd, 2021
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 198 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 183 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இந்நாட்டு மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 85 ஆயிரத்து 696 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 23 ஆயிரத்து 390 ஆக அதிகரித்துள்ளது
Related posts:
உளநலம் பாதிக்கப்பட்டவர்களை தேர்தல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தவேண்டாம் - தேர்தல் ஆணைக்குழு
இணைவழி கற்றலில் ஈடுபட வசதிகளற்ற மாணவர்களுக்காக முன்னெடுக்கப்படும் புதிய திட்டம் - கல்வி அமைச்சர் பேர...
அமெரிக்கத் தூதுவர் - வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு!
|
|
|


