ஊரடங்கால் வாழ்வாதாரங்களை இழந்துள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் – நிதியமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!
Saturday, August 21st, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ள குடும்பங்களுக்காக நிவாரண கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் 2,000 ரூபாவை நிவாரணக் கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்
அத்துடன் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதுடன் எந்தவிதமான கொடுப்பனவுகளும் பெற்றுக்கொள்ளாத குடும்பங்களுக்கே இந்த கொடுப்பனவை அரசாங்கம் வழங்க உள்ளது.
கோவிட் பெருந்தொற்று காரணமாக நாடு எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் முடக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கொடுப்பனவு பற்றி நிதி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையில் அதிகரிக்கும் வெப்பம் - ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்து வரவதாக அனர்த்த முகாமைத்துவ மத்த...
தாமதமான இரு காற்றாலை ஆற்றல் திட்டங்கள் அடுத்த மாதத்திற்குள் முன்னேற்றம் அடையும் - மின்சக்தி மற்றும் ...
வெளியானது ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள்!
|
|
|
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு மன்னிப்பு வழங்கத் தயார்! பேராயர் கர்தினால் மெல்...
மாணவர்களுக்கு முதலாம் தரத்தில் இருந்து ஆங்கிலம் கற்பிப்பதற்காக 13 ஆயிரத்து 800 ஆசிரியர்களுக்கு பயிற்...
கடமைகளை பொறுப்பேற்ற வடக்கின் புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் விதான பத்திரணஹாலகே சமன் தர்மசிறீ பத்தி...


