இன்றும் சில மாகாணங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Thursday, August 12th, 2021

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது..

அத்துடன் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் எதிர்வுகூறியுள்ள வளிமண்டலவியல் திணைக்களம் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் - பொதுமக்களிடம் கொரோனா செ...
யாழ்ப்பாணத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான இரண்டாவது செலுத்துகை நாளைமுதல் ஆரம்பம் - வடமாகாண பி...
எவருக்கும் மானிய விலையில் எரிபொருள் விநியோகிக்கப்படுவது இல்லை - அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!