நெருக்கமானவருக்கு தொற்று ஏற்பட்டால் 3 முதல் 5 நாள்களில் பரிசோதனை செய்ய வேண்டும் – ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலையின் நுண் உயிரியல் துறை பரிந்துரை!
Sunday, August 8th, 2021
கொரோனா தொற்று உறுதியான ஒருவருடன் நெருங்கிய தொடர்புடையவர்களுக்கு 3 முதல் 5 நாட்களுக்குள் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் நுண் உயிரியல் துறை பரிந்துரைத்துள்ளது.
நோய் கட்டுப்பாட்டு நிலையத்தின் பரிந்துரை, சோதனைகளை மேற்கோள் காட்டி அத்துறையின் பணிப்பாளர், வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், முன்னதாக, கொரோனா பரிசோதிக்கப்பட வேண்டிய காலம் 5 முதல் 7 நாள்கள் வரை காணப்பட்டது என தெரிவித்துள்ளார்.
அறிகுறிகள் இருந்தால் அன்டிஜென் பரிசோதனையும், அறிகுறிகள் இல்லாதிருந்தால் பி.சி.ஆர். பரிசோதனையும் செய்வது நல்லது என்றும் சந்திம ஜீவந்தர தேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிப்பு!
வேலைத்திட்டங்களை இடைநடுவே நிறுத்தாது பூர்த்தி செய்வதற்கு அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயற்பட வ...
அரிசி மற்றும் வெங்காயத்துக்கான விசேட பண்டவரி குறைக்கப்பட்டது - ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வர்த்தமான...
|
|
|


