சந்தர்ப்பவாத ஆர்ப்பாட்டங்கள் செய்வதை நிறுத்துங்கள் – தொழிற்சங்கங்களிடம் அமைச்சர் நாமல் வலியுறுத்து!
Sunday, August 8th, 2021
சந்தர்ப்பவாத ஆர்ப்பாட்டம் செய்து மக்களை கஸ்டத்தில் தள்ளி, கோரிக்கைகளை முன்வைத்து நிறைவேற்றிக் கொண்டால் அதன் வெற்றியை கொண்டாட முடியாது என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தொழிற்சங்கங்களிடம் கோரிக்கை தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டில் தற்போதுள்ள நிலைமைகளை கருத்தில் கொண்டு தொழிற்சங்க நடவடிக்கைகளை லொக்டவுன் செய்யுமாறும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தொழிற்சங்கங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேநேரம் அரசாங்கத்துடன் அல்லது ஜனாதிபதியுடம் பிரச்சினை இருந்தால் அதனை தனிப்பட்ட முறையில் பேசித் தீர்த்துக் கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆபத்துக்களை கருத்தில் கொண்டு செயற்படுமாறும் அதிபர் – ஆசிரியர் சம்பள முரண்பாட்டுக்கு வைரஸ் பரவல் நிலை முடிந்த பின் தீர்வு காண முடியும் எனவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சிறைக் கைதிகள் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் பாரிய வீழ்ச்சி!
வாசகர்களுக்கு EPDPNEWS.COM இணையத்தளத்தின் தீபாவளி வாழ்த்துக்கள்!
வலிகாமம் தெற்கு பொது அமைப்புகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் உதவித் திட்டங்கள் வழங்கிவைப்பு...
|
|
|


