இலங்கையின் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் 5 ஆயிரத்தைக் கடந்தது – பாதுகாப்பாக இருக்குமாறு சுகாதார பகுதியினர் கடுமையான எச்சரிக்கை!
Sunday, August 8th, 2021
நாட்டில் மேலும் இரண்டு ஆயிரத்து 796 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 27 ஆயிரத்து 19 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே நாட்டில் நேற்றும் 98 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 17ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி நாட்டில் பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கையும் 5 ஆயிரத்தைக் கடந்துள்ளழம குறிப்பிடத்தக்கது.
Related posts:
யுக்ரைனின் இரு நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தம் - பொதுமக்கள் வெளியேறுவதற்காகவே இந்த நடவடிக்கை எ...
பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் கட்டாயமில்லை என்ற தீர்மானத்திற்கு விசேட வைத்தியர்கள் சங்கம் கண்டனம்...
அரச நிறுவனங்களில் நீண்டகாலமாக நிலவும் வாகனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 2,000 கெப் வண்டிகள் இறக்க...
|
|
|
அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் நிறுத்தம் - யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்...
பொருளாதார நெருக்கடியை வென்று மீண்டும் நாட்டில் அபிவிருத்தி போரை ஆரம்பிக்க அரசாங்கம் தயாராக உள்ளது - ...
சோதனை நடவடிக்கைகளின் மூலம் 26 கோடி ரூபாவிற்கும் அதிகமான அபராதம் வசூலிப்ப - பாவனையாளர் அலுவல்கள் அதி...


