யாழ்ப்பாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட 75 வீதமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், தகவல்!
Saturday, August 7th, 2021
யாழ்ப்பாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட 2 இலட்சத்து 61 ஆயிரத்து 112 பேர், கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸை பெற்றுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக கேதீஸ்வரன் மேலும் கூறறுகையில் –
“யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே முதல் இரண்டு கட்டங்களிலும் ஒரு இலட்சம் பேருக்கு தடுப்பூசியின் முதலாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் 50 ஆயிரம் பேர் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் தற்போது 3 ஆம் கட்டமாக 2 இலட்சம் பேருக்கு தடுப்பூசியின் முதலாவது டோஸ் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் பாடசாலை ஆசிரியர்களுக்கும் வழங்கப்படுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
மக்களிடம் மன்னிப்பு கோரினார் இராணுவ தளபதி!
அரச துறைக்கு 2024 ஆம் ஆண்டுமுதல் முறையான மதிப்பீட்டு நடைமுறை அறிமுகம் - நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான...
ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி!
|
|
|


