நாடு முடக்கப்படுவது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் இன்று விசேட கலந்துரையாடல்!
Friday, August 6th, 2021
நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்பான தற்போதைய நிலைமைகள் குறித்து விவாதிக்க ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் இன்று ஒரு முக்கிய கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
கொவிட்-19 தொற்றால் நாளாந்த நோயாளர்களது எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளின் அதிகரிப்பு வேகம் ஆகியவற்றை கருத்திற் கொண்டே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
வைரஸ் வேகமாக பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய முடக்கலுக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்துள்ளன, மேலும் அது தொடர்பில் இன்றைய கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
32 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணம் - இந்தியா இடையே பயணிகள் கப்பல் சேவை ஆரம்பம்!
மீண்டும் தீவிரமடையும் கொரோனா தொற்று - நாட்டு மக்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளுமாறு அரச வைத்திய அதி...
ஆளுநருக்கு அனுப்பிய கடிதத்தை மீளப்பெறுவதாக பதில் மாகாண சுகாதார பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு!
|
|
|


