கடமைகளுக்கு அழைப்பதற்கான சுற்றுநிருபம் ஆசிரியர்களுக்கு தாக்கம் செலுத்தாது!
Saturday, July 31st, 2021
அரச சேவையாளர்களை வழமைப்போன்று கடமைகளுக்கு அழைப்பதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ள போதிலும், அது ஆசிரியர்களுக்கு தாக்கம் செலுத்தாது என தெரிவிக்கப்படுகின்றது.
அரச நிறுவனங்கள் நாளைமறுதினம்முதல் வழமைப்போன்று இயங்கவுள்ளன. எனினும் பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருப்பதால், குறித்த சுற்றுநிருபம் ஆசிரியர்களுக்கு தாக்கம் செலுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளை மீள திறப்பதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.
அவ்வாறான அனுமதிகள் வழங்கப்பட்டால் ஆசிரியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளரினால் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வர்த்தமானி விலைப்படி அரிசி விற்பனை செய்யப்படவில்லை - பொதுமக்கள் குற்றச்சாட்டு!
உடுவில் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட 398 குடும்பங்களும் இரு வாரங்களுக்கு தனிமைப்படுத்தலில் இருப்பர்...
ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ணம் - இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்தை வென்று போட்டிக்குத் தகுதி ப...
|
|
|


