2 ஆவது நாளாகவும் 5 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன!
Saturday, July 31st, 2021
கொவிட் தடுப்பூசி செலும் வேலைத் திட்டத்தின் கீழ் 5 இலட்சத்து 13 ஆயிரத்து 820 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அதன்படி, தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவும் 5 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் நேற்றுமுன்தினம் ஒரேநாளில் 5 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கு ட்விட்டர் பதிவொன்றில் இலங்கையை பாராட்டி உலக சுகாதார ஸ்தாபனம் வாழ்த்து தெரிவித்திருந்தது. கொவிட் தடுப்பு நடவடிக்கையின் கீழ், இலங்கையில் நேற்றுமுன்தினம் மாத்திரம் இலங்கையில் 5 இலட்சத்து 15 ஆயிரத்து 830 பேருக்கும் கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
எல்லைத்தாண்டிய தமிழக மீன்பிடியாளர்களின் படகு விபத்து - நீர்ல் மூழ்கிய இருவர் மீட்பு - ஒருவர் மாயம்!
மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னதாக தேர்தல் ஒன்று நடாத்தப்படும் - தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு!
GCE O/L பரீட்சை விண்ணப்ப காலம் நீடிப்பு - சீரற்ற வானிலை காரணமாக நடவடிக்கை!
|
|
|


