மேலும் ஒரு தொகுதி அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இன்று பிற்பகல் நாட்டை வந்தடையும் – சுகாதார அமைச்சு தகவல்!
Saturday, July 31st, 2021
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் வழங்கப்படும், அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இன்று பிற்பகல் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, 7 இலட்சத்து 28 ஆயிரத்து 460 அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளே இன்று கிடைக்கப்பெறவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அஸ்ட்ராசெனெகா முதலாம் தடுப்பூசி செலுத்தப்பட்ட சுமார் 5 இலட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கான இரண்டாம் செலுத்துகைக்காக குறித்த தடுப்பூசிகள் முதற்கட்டமாக பயன்படுத்தப்படும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இவர்களில் 5 இலட்சத்து 26 ஆயிரம் பேர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ளனர். இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதன் பின்னர், எஞ்சிய தடுப்பூசிகளை கேகாலை மாவட்ட மக்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
குத்தகை அடிப்படையில் சரக்கு விமானமொன்றை பெற்றுக் கொள்ள அமைச்சரவை அனுமதி!
சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு சீன ஜனாதிபதியிடமிருந்தும...
ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ணம் - இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்தை வென்று போட்டிக்குத் தகுதி ப...
|
|
|


