சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதைத் தடுக்க நடவடிக்கை – மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!
Tuesday, July 27th, 2021
சிறுவர்களை வேலைகளுக்கு அமர்த்த முடியுமான ஆகக்குறைந்த வயதெல்லையை 18 வயதாக உயர்த்துவதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றை தயாரித்துவருவதாக மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் வீட்டில் வீட்டு வேலைக்காக அமர்த்தப்பட்டிருந்த சிறுமி எரிகாயங்களுடன் இறந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வயது குறைந்த சிறுவர்களை வேலைகளுக்காக அமர்த்துவது தொடர்பாக சமூகத்தில் விவாதங்கள் இடம்பெறுகின்றன
இவ்வாறான சம்பவங்களின் அடிப்படையில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதைத் தடுக்க, ஆகக் குறைந்த வயதெல்லையை 18 ஆக உயர்த்துவதில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த மேலும் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வவுனியாவில் கோர விபத்து : 19 பேர் படுகாயம்!
கையூடு கொடுத்து எமது கட்சிக்கு சேறுபூசும் சரவணபவன் தமிழ் மக்களின் பணத்தை சூறையாடியதை மறந்துவிட்டாரா ...
40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசலுடன் இலங்கை வருகைதரும் மற்றுமொரு கப்பல் - இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம...
|
|
|
வடக்கின் பெண்கள் விவகாரப் பிரிவு பெயர்ப் பலகையில் மாத்திரம் தான் இயங்குகின்றது: - வடமாகாண சுகாதார...
நெடுந்தீவு பிரதேச ஈ.பி.டி.பியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் யாழ்.மாவாட்ட நிர்வாக செயலாளர்கள்...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பெரமுனவின் சார்பில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு ரணில் விக்ரமசிங்கவுக்...


