மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் புகையிரத சேவைகள் இடைநிறுத்தம் – இராஜாங்க அமைச்சர் திலும் அமனுகம அறிவிப்பு!
Saturday, July 17th, 2021
மாகாணங்களுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட பேருந்து மற்றும் புகையிரத சேவைகளை ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமனுகம தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் திலும் அமனுகம இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில் –
இன்று 17 ஆம் திகதிமுதல் எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதிவரை மாகாணங்களுக்கிடையிலான பேருந்து மற்றும் புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளார். இருப்பினும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதிமுதல் வரையறுக்கப்பட்ட வகையில் பேருந்து மற்றும் புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் திலும் அமனுகம மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மது போதையில் வாகனம் செலுத்திய இரு ஆசிரியர்கள் மானிப்பாயில் கைது !
தீர்வின்றி தொடரும் கொரோனா அச்சுறுத்தல் : ஒரே நாளில் ஒரு இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று !
ஆலய உற்சவங்கள் மற்றும் விழாக்களுக்கு யானைகளைப் பயன்படுத்துதல் தொடர்பில் யாழ் மாவட்ட அரச அதிபர் விசேட...
|
|
|


