கொரோனா அச்சுறுத்தல் இன்னும் நீங்கவில்லை – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!
Friday, July 16th, 2021
நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் இன்னும் நீங்கவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அந்த சங்கத்தின் உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
டெல்டா வகை கொரோனா தொற்றுக்குள்ளான 19 பேர் நாட்டின் பல பாகங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே டெல்டா வகை வைரஸ் நாட்டில் தொடர்ந்தும் பரவலடைவதை தடுக்க வேண்டுமாயின் பயணக்கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்
Related posts:
பம்பலப்பிட்டி இளம் வர்த்தகர் கொலை தொடர்பில் மேலும் இருவரது கடவுச்சீட்டு முடக்கம்!
வேட்பாளர்கள் தொடர்பில் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் - பெப்ரல்!
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - ஒரு வயது குழந்தை உயிரிழப்பு!
|
|
|


