தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 43 ஆயிரம் பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் – சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு!

Thursday, July 15th, 2021

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 190 பேர், கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இத்துடன் கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில், தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 50 ஆயிரத்து 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 43 ஆயிரம் பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும் 7 ஆயிரம் பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


நல்லிணக்கப் பயணமாக மாத்தறையிலிருந்து வருகை தந்த குழுவினர் யாழில் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்துப் பே...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக தேசிய மொழிப் பயிற்சி நிறுவனம் நடத்தும் ஆங்கில மொழிப் பாடத்தை ஐந்து பேர...
ஜனாதிபதி தேர்தல் - அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் தற்காலிக வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள ...