பிரதமரின் புதிய அமைச்சுக்கான செயலாளராக அனுஷ பெல்பிட்ட நியமனம்!
Wednesday, July 14th, 2021
பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட செயற்படுத்துகை அமைச்சின் செயலாளராக சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி அனுஷ பெல்பிட்ட நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறித்த அமைச்சின் அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டதுடன், அவர் வகித்த நிதியமைச்சு பதவி பசில் ராஜபக்ஷ வசமானது.
புதிய அரசாங்கத்தில் கைத்தொழில் அமைச்சின் செயலாளராக பதவி வகித் அனுஷ பெல்பிட்ட, அண்மையில் ஓய்வுபெற அனுமதி கோரி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
அதன்பின்னர் கடந்த ஜூன் 21 ஆம் திகதி அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக அனுஷ பெல்பிட்ட நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிட்டத்தக்கது.
Related posts:
கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தற்போதுள்ள வைரஸை விட மிகப் பயங்கரமானதாக இருக்கும் - விஞ்ஞானிகள் உலகுக...
வரலாற்றில் முதல் முறையாக இணையதளம் ஊடாக ஐ.நா. கூட்டத்தொடர் நாளை ஆரம்பம் !
பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச தாதியர் சங்கம்!
|
|
|


