விசா செல்லுபடியாகும் காலம் நீடிப்பு – குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவிப்பு!
Friday, July 9th, 2021
தற்போது நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் அனைத்து விசாக்களினதும் செல்லுபடி காலம் மேலும் ஒரு மாதக்காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இன்று 9 ஆம் திகதிமுதல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
விசா காலம் நிறைவடைந்தவர்களுக்கு அந்த காலப்பகுதிக்கான விசா கட்டணம் அறவிடப்படுமே தவிர எந்தவித அபராதமும் விதிக்கப்பட மாட்டாது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாங்குளத்தில் பேருந்து தடம்புரண்டது! 13 பல்கலை மாணவர்கள் படுகாயம்!
இரட்டை கோபுர தாக்குதலில் சேதமடைந்த சுரங்க ரயில்நிலையம் பிறகு திறப்பு!
வேட்புமனு கோரும் திகதி இன்று தீர்மானிக்கப்படும் - தேர்தல்கள் ஆணைக்குழு!
|
|
|


