கடந்த 24 மணிநேரத்தில் 1,270 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி!
Friday, July 9th, 2021
இலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்த 270 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்களில் ஆயிரத்து 223 பேர் புத்தாண்டுக் கொத்தணியில் பதிவானதுடன், 47 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பிய நிலையில், தனிமைப்படுத்தப்பட்டவர்களாவர்.
இதன்படி நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 69 ஆயிரத்து 946 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம் கொவிட்-19 தொற்றிலிருந்து இதுவரை 2 இலட்சத்து 39 ஆயிரத்து 584 பேர் குணமடைந்துள்ளனர். அத்துடன் 27 ஆயிரத்து 11 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஐ.நா.பொதுச் சபையின் 33 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகிறது!
ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் பாரபட்சமற்றவகையில் தண்டனை வழங்கப்படும் – அமைச்சர் நாம...
வீதியில் குப்பை போடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - யாழ்ப்பாணம் மாநகர சபை நடவடிக்கை!
|
|
|


