அச்சுவேலியில் பதிவு திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 38 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்!
Wednesday, July 7th, 2021
யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தரின் பதிவு திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 38 குடும்பங்களை சுகாதர பிரிவினர் தனிமைப்படுத்தி உள்ளனர்.
கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள ஜே – 276 கிராம சேவையாளர் பிரிவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த பதிவு திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் மாப்பிள்ளை தோழனுக்கு அதாவது மணமகளின் சகோதரனுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் ,மணமக்கள் குடும்பத்தினர் உள்ளிட்ட 38 குடும்பங்களை 56 நபர்கள் அடையாளம் காணப்பட்டு சுகாதார பிரிவினர் தனிமைப்படுத்தி உள்ளனர்.
அதேவேளை குறித்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மணமகனுடன் கடமையாற்றும் 08 பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கல்வி நிறுவனங்கள் நல்லிணக்கத்தின் கேந்திர நிலையமாக உருவாக்கப்படவேண்டும்!
கொழும்பு - கிராண்ட்பாஸ் பகுதியில் தீ விபத்து - 50 வீடுகள் சேதம் என பொலிஸார் தகவல்!
121 பொலிஸ் நிலையங்களின் வாடகை மற்றும் பராமரிப்பு செலவு 11 கோடி - பொலிஸ் முகாமைத்துவப் பிரிவு தகவல்!
|
|
|


