பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி அடுத்த வாரம் ஆரம்பம்!
Tuesday, July 6th, 2021
கொவிட் தடுப்பூசி அடுத்த வாரம் தொடக்கம் அனைத்து பாடசாலை ஆசிரியர்களுக்கும் வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் ஆசிரியர்களுக்கான தடுப்பூசி போடும் பணி அடுத்த வாரம் ஆரம்பமாகும் எனவும் பாடசாலைகளில் கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கும் முன் அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஒவ்வோர் ஆசிரியருக்கும் தடுப்பூசி போடுவதற்கான முறையான திட்டத்தை நாம் உருவாக்கி வருகின்றோம். இந்நாட்டில் சுமார் 2 இலட்சத்து 42,ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர்.
அடுத்த தவணை ஆரம்பிக்க முன் அவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என நாம் நம்புகிறோம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிழப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையருக்கு பாதிப்பு இல்லை!
சிறுவர்களுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் ஏற்படுவதற்கான சாத்தியம் - சிறுவர்நல வைத்தியர் தீபால...
உரிய முறையில் விசாரணை இல்லையோல் எந்த ஒரு அரச விடுதிகளிலும் தாங்க முடியாது - ரூபினி வரதலிங்கம் காட்டம...
|
|
|
யாழ் தேவியை யாழ்ப்பாணம் கொண்டுசெல்ல மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டவர் டக்ளஸ் தேவானந்தா - பிரபா கணேசன்...
மின் கட்டணம் உயர்ந்தால் அதிகாரிகளின் வீடுகளும் தீக்கிரையாக்கப்படும் - நாடாளுமன்றில் எச்சரிக்கை விடுத...
சமூக ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கான எந்ந தேவையும் அரசாங்கத்திற்கு இல்லை - அமைச்சர் பந்துல குணவர்...


