மாகாணங்களுக்கு இடையில் பயணங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளவர்கள், சுகாதார வழிகாட்டல்களை உரியவாறு பின்பற்ற வேண்டும் – பொலிசார் வலியுறுத்து!
Monday, July 5th, 2021
மாகாணங்களுக்கு இடையில் பயணங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளவர்கள், சுகாதார வழிகாட்டல்களை உரியவாறு பின்பற்ற வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுபாடுகள், எதிர்வரும் 19 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, குறித்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.
மேல் மாகாணத்திற்குள் உள்நுழையும் மற்றும் மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறும் 14 இடங்களில், வீதித் தடைகள் மூலம் சோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அத்துடன், ஏனைய மாகாணங்களிலும், வீதித் தடை சோதனைகள் இடம்பெறுகின்றன.
இந்நிலையில், மாகாண பயணத்தடையை மீறி, சட்டவிரோதமாக செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மே 11 ஆம் திகதியுடன் கொரோனாவுக்கு தீர்வு கிடைக்குமென்று நான் ஒருபோதும் கூறவில்லை - சுகாதார பணிப்பாளர...
பிரதமர் மஹிந்த ராஜபக்ச - கியூப தூதுவர் இடையே சந்திப்பு – இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதற்கும் ...
தேர்தலை நடத்துவது அல்லது பிற்போடுவது தொடர்பான தீர்மானத்தை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு எடுக்க வேண்டும்...
|
|
|


