வருமானம் அற்றுப்போனதால் நிர்க்கதியாகியுள்ளோம் – பாடசாலை வாகன சேவை உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!
Saturday, July 3rd, 2021
பல மாதங்களாகப் பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், தங்களது வருமானம் முற்றாக அற்றுப் போய் இருப்பதாக, பாடசாலை சேவையை முன்னெடுத்த வாகன சேவை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் தொடரும் நிலைமைகளால் தங்களது கடன்களையும் வாகனங்களுக்கான குத்தகை தவணைக் கொடுப்பனவுகளையும் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் மேல் மாகாணத்தில் நடுத்தர நிகழ்வுகளை ஒழுங்கு செய்யும் நிறுவனங்களின் அமைப்பும் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தங்களது வருவாய் இழக்கப்பட்டிருப்பதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
சர்வதேச நாணய நிதியத்திற்கு கடன் வழங்குநர்களின் உத்தரவாதம் – இலங்கை அரசாங்கம் வரவேற்பு!
விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு இன்றுமுதல் ஆரம்பம் – அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவிப்பு!
தனியார்துறை ஊழியர்களின் ஆகக்குறைந்த அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கு புதிய முறைமை தயாரிக்கப்படும் -...
|
|
|


