கர்ப்பிணி பெண்கள் 200 பேருக்கு கொவிட் தொற்று – அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என குடும்பநல பணியகத்தின் பணிப்பாளர் எச்சரிக்கை!
Sunday, June 27th, 2021
கொரோனா தொற்றால் பீடிக்கப்பட்ட சுமார் 200 கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என குடும்பநல பணியகத்தின் பணிப்பாளர் விஷேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் குழந்தைகளை பிரசவித்த சுமார் 25 தாய்மார்கள் கொரோனா தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், கர்ப்பிணி பெண்களை அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே அனுப்புவதை தவிர்த்து கொள்ளுமாறும் குடும்பநல பணியகத்தின் பணிப்பாளர் விஷேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிரதமரின் அறிவிப்பை வரவேற்கின்றேன்! டக்ளஸ் தேவானந்தா
கிளிநொச்சி மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணையினை நடத்துமாறு ஆளுநர் உத்தரவு!
கடந்த 10 நாட்களில் 500 இற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பலி - அரசாங்கத் தகவல் திணைக்கள தகவல்கள் ...
|
|
|


