2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள் ஆரம்பம் – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
Tuesday, June 22nd, 2021
2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள் இன்று (22) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எனினும், வாக்காளர் இடாப்பு திருத்தத்திற்கான படிவம் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக, புதிய வாக்காளர்களின் தரவுகளை கிராம உத்தியோகத்தர் பெற்று ஆவணத்தை புதுப்பிக்கவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேநேரம் வாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நிறைவு செய்யப்படவுள்ளன. எனினும், கொரோனா தொற்று நிலையால் எதிர்பார்க்குமளவில் ஆகஸ்ட் மாதம் இதற்கான பணிகளை பூர்த்தி செய்ய முடியாது போகும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அமரர் வேலன் அருளானந்தத்தின் புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி மரியாதை!
அரசியல்வாதிகளை விடவும் மோசமானவர்களாக ஊடகங்கள் மாறியிருக்கின்றன - சுமந்திரன் குற்றச்சாட்டு!
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குத் தோற்றும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்...
|
|
|


