யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் இதுவரை 55 பேர் உயிரிழப்பு!

Sunday, June 13th, 2021

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் சிகிச்சை விடுதியில், சிகிச்சை பெற்று வந்த பருத்தித்துறையினைச் சேர்ந்த 68 வயதுடைய ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலத்தை சுகாதார விதிமுறைகளுக்கு அமையவாக கோம்பயன் மணல் மயானத்தில் மின் தகனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதேவேளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த  பெண்ணொருவரும் நேற்று உயிரிழந்துள்ளார். அவரது உடலினையும் தகனம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய யாழ்ப்பாணத்தில் இதுவரை 55 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

கொரோனா சவால்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்புச் செய்யும் தொழிலாளர்களை கௌரவிக்க வேண்டும் – மேதின செய்திய...
தேர்தல் விதிமுறைகளை மீறி காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதைகள் அகற்றம் - யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் தெரிவ...
கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் மீண்டும் இன்றையதினம் ஆரம்பம்!

பாடசாலை மாணவர்களுக்கான காப்புறுதித் திட்டத்தின் கீழ் 70 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது - கல்வி அமைச்...
இறக்குமதி முட்டை சில்லறை விற்பனைக்கென வெளியான அறிக்கை தவறானது! – விவசாய அமைச்சு தெரிவிப்பு!
உறுதி செய்யப்பட்ட 8 இலட்சம் பயனாளிகளுக்கான, ஜூலை மாதத்த கொடுப்பனவு இன்றுமுதல் வங்கிக் கணக்குகளில் வர...