வடக்கில் முடக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் மேலும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்!
Monday, June 7th, 2021
வவுனியா சகாயமாதாபுரத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன் வவுனியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 30 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வவுனியா சகாயமாதாபுரத்தில் கொரோனா தொற்றாளர்கள் சிலர் அடையாளம் காணப்பட்ட நிலையில் நேற்றயதினம் குறித்த கிராமத்தில் முடக்கல் நிலை கடுமையாக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கிராமத்தில் வசிக்கும் மக்களிடம் நேற்றயதினம் சுகாதாரபிரிவினரால் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகளின் பிரகாரம் மேலும் 22 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதேவேளை வவுனியா சுந்தரபுரம், மகாறம்பைக்குளம், தெற்கிலுப்பைக்குளம், தோணிக்கல் போன்ற பகுதிகளில் 8 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இன்று மாத்திரம் 30 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இலங்கைக்கு உதவுவதற்கு சீனா தயாராகவே உள்ளது - சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜாவோ லிஜியான் தெரிவி...
36,000 மெற்றிக் தொன் டிஎஸ்பி உரத்துடன் கப்பல் நாட்டுக்கு வருகை - விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கவும் நட...
ஆசிரியர் ஆட்சேர்ப்பு - கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு ...!
|
|
|


