போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளபோதிலும் நோயாளர்கள் எண்ணிக்கை குறையவில்லை – பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டு!
Sunday, June 6th, 2021
போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள போதிலும் நோயாளர்கள் எண்ணிக்கை குறையவில்லை என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு குறையைவில்லை எனவும் பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல்ரோகண தெரிவித்துள்ளார்.
அதேநேரம் பலர் போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறுகின்றனர் என சுட்டிக்காட்’டியுள்ள பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர், தற்போது போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள நிலையில் அடுத்தவாரமளவில் நோயாளர்கள் எண்ணிக்கை குறைவடையலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் குறித்த கட்டுப்பாடகளூடாக நாங்கள் எதிர்பார்த்தளவிற்கு தொற்றின் தன்மை வீழ்ச்சியடைந்து காணப்படாது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
15 ஆயிரம் ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள தீர்மானம் – கல்வி அமைச்சு!
இலங்கையிலிருந்து வெளிநாடு செல்லும் பெண்கள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை - அமைச்சர் நிமல் சிறிபால டி...
நாட்டில் இனப்பிரச்சினை இல்லை - தமிழ் அரசியல்வாதிகள் மீது சரத் வீரசேகர குற்றச்சாட்டு!
|
|
|


