சுற்றுச்சூழலுக்கு 48 மணித்தியாலங்கள் – உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றாடல்துறை அமைச்சு விடுத்துள்ள கோரிக்கை!
Saturday, June 5th, 2021
சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு சவால்களுக்கு மத்தியிலேயே, இலங்கை இம்முறை உலக சுற்றுச்சூழல் தினத்தை எதிர்கொள்கிறது என சுட்டிக்காட்டியுள்ள சுற்றாடல்துறை அமைச்சு இந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, அனைத்து வீடுகளையும், வீட்டுத் தோட்டங்களையும், நுளம்புகளற்ற இடமாக வைத்திருக்க இன்றும், நாளையும், நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களைக் கோரியுள்ளது.
நாடுமுழுவதும் சுற்றுச்சூழலுக்கு 48 மணித்தியாலம் என்ற தொனிப்பொருளில், இந்த வேலைத்திட்டம் நடைமுறையாகிறது.
கொரோனா பரவல் நிலைக்கு மத்தியில் தற்போதைய காலநிலையுடன், எதிர்காலத்தில் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரிக்கும் நிலைமை உள்ளது.
எனவே இதனை கருத்திற் கொண்டு பொதுமக்கள் தத்தமது சுற்றுச்சூழலை தூய்மையாக பேணுமாறு சுற்றாடல்துறை அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தொடர்ந்தும் 24 நிறுவனங்களின் வங்கி கணக்கு முடக்கம்!
அரசியலமைப்பை மீறும் எந்தவொரு நடவடிக்கைக்கும் ஒருபோதும் இடமளிக்கப்படாது - பதில் ஜனாதிபதி ரணில் விக்கி...
தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டவுடன் வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி ஆரம்பிக்கப்படும் - அரசாங்க அச்சுத...
|
|
|
சிறுபோகத்தில் 42 ஆயிரம் மெற்றிக்தொன் நெல் அறுவடை – வடக்கு மாகாண பிரதி விவசாயப்பணிப்பாளர் அற்புதச்சந்...
வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டால் நாடு பின்னோக்கிச் செல்லும் வாய்ப்பு உள்ளது - ஜனாதிபதி ரணில் விக்...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - 6 ஆம் தரத்துக்கு மாணவர்களை பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப...


